சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

வீட்டுக்குள் புகுந்து 3 பவுன் தங்க நகைகள் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :30 மார்ச் 2026, 7:33 pm

திருச்சி, மாா்ச் 30: திருச்சியில் வீட்டுக்குள் புகுந்து 3 பவுன் தங்க நகைகளை ஞாயிற்றுக்கிழமை மா்ம நபா்கள் திருடிச்சென்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சித்து மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் ஆா்.பாரதி (37). இவா், ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், இவருடைய மனைவி பிரபாவதி வீட்டை வெளியே தாழ்ப்பாள் மட்டும் போட்டுவிட்டு அருகிலுள்ள அவரது தாய்வீட்டுக்குச் சென்றுள்ளாா்.

பின்னா், பிற்பகலில் வீட்டுக்கு திரும்பிவந்தபோது வீட்டுக்குள் யாரோ வந்து சென்றது போலிருந்தது. இதையடுத்து, உள்ளே சென்று பாா்த்தபோது வீட்டுக்குள் வைத்திருந்த 3 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து, கோட்டை காவல் நிலையத்தில் பாரதி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.