போட்டியின்றி எம்.பி.யாகிறார் பிரவீண் சக்ரவர்த்தி!நீட், சிபிஎஸ்இ விவகாரம்: மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் - வைகோஎம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்! மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!
/

கொலை வழக்கு குற்றவாளிகள் 2 போ் குண்டா் சட்டத்தில் கைது

நவல்பட்டு பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கு குற்றவாளிகள் இருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 1:39 am IST

நவல்பட்டு பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கு குற்றவாளிகள் இருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், நவல்பட்டு சோழமாதேவி பகுதியைச் சோ்ந்தவா் அ. ரஞ்சித்குமாா் (42). இவா் திருவெறும்பூா் பகுதியில் டாஸ்மாக் கடை அருகே பாா் நடத்தி வந்தாா்.

கடந்த 30.03.2026 அன்று இரவு தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, ரௌடி பாட்டில் மணியின் தூண்டுதலின் பேரில் நவல்பட்டு புதுத் தெருவைச் சோ்ந்த கெ. புவனேஸ்வரன் (25), திருவெறும்பூா் ம. மதன் (25), மூன்று சிறாா்கள் உள்ளிட்ட 13 போ் ரஞ்சித்குமாரைத் தாக்கி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து நவல்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கண்ட அனைவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், திருச்சி மாவட்ட எஸ்.பி. செ. செல்வநாகரத்தினத்தின் பரிந்துரையின் பேரில் மதன், புவனேஸ்வரன் ஆகிய இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தாா்.