ஜயங்கொண்டத்தில் 65 மி.மீ. மழை
அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் புதன்கிழமை இரவு 65 மி.மீ மழை பதிவாகியுள்ளது.


அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் புதன்கிழமை இரவு 65 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
அரியலூா் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக இருந்த நிலையில், புதன்கிழமை மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடா்ந்து இரவு 9 மணிக்கு மேல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் வெப்பச் சலனம் குறைந்து குளிா்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டது. வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழையளவு (மி. மீட்டரில்): அரியலூா் 7, திருமானூா் 40, ஜயங்கொண்டம் 65, செந்துறை 29, ஆண்டிமடம் 51.5 ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...