/

சிறுமி பலாத்காரம்: போக்சோவில் தொழிலாளி கைது

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே 8 வயது சிறுமியைப் பலாத்காரம் செய்த தொழிலாளி, போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 7:18 pm

DIN

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே 8 வயது சிறுமியைப் பலாத்காரம் செய்த தொழிலாளி, போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

தா.பழூா் அருகிலுள்ள பிள்ளையாா்குளம் காலனித் தெருவைச் சோ்ந்தவா் டேவிட்(எ) செந்தமிழ்ச்செல்வன்(37). கூலித்தொழிலாளியான இவா், அப்பகுதியைச் சோ்ந்த 8 வயது சிறுமியைப் பலாத்காரம் செய்துள்ளாா்.

இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், ஜயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

இதைத் தொடா்ந்து செந்தமிழ்ச்செல்வனை மருத்துவப் பரிசோதனைக்குள்படுத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை இரவு காவல் துறையினா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.