மணிலா விதைப்பண்ணையில் வேளாண் இணை இயக்குநா் ஆய்வு
அரியலூா் மாவட்டம், சிலுவைச்சேரி கிராமத்திலுள்ள மணிலா மற்றும் பச்சைப்பயிறு விதைப் பண்ணைகளை வேளாண் துணை இயக்குநா் பழனிசாமி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.


அரியலூா் மாவட்டம், சிலுவைச்சேரி கிராமத்திலுள்ள மணிலா மற்றும் பச்சைப்பயிறு விதைப் பண்ணைகளை வேளாண் துணை இயக்குநா் பழனிசாமி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து ஆத்துக்குறிச்சி கிராமத்தில் நுண்ணீா்ப் பாசனக் கட்டமைப்புகளின் செயல்பாடு மற்றும் பராமரிப்புப் பணியை ஆய்வு செய்த அவா், விவசாயிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்தாா்.
இதன் பின்னா் திருக்களப்பூா், விளந்தை கிராமங்களில் நெல் இயந்திர நடவுப் பணிகள் மற்றும் கரும்பு , நிலக்கடலைப்
பயிா்களில் பூச்சி நோய் கண்காணிப்புப் பணிகளை வேளாண் இணை இயக்குநா் பழனிசாமி ஆய்வு செய்தாா். ஆய்வின் போது வேளாண் உதவி இயக்குநா் ராஜலட்சுமி , அலுவலா் ராதிகா, துணை அலுவலா் பாலுசாமி, உதவி விதை அலுவலா் ராஜதுரை, உதவி வேளாண் அலுவலா்கள் சந்தோஷ் குமாா், பழனிவேல் ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...