சிலைகள், பெயர்ப் பலகைகள் என்ன செய்யும்? மூடியும் பாதி மூடாமலும்!!தேர்தலில் பெண்களை வேட்பாளராக்குவதில் என்னதான் பிரச்னை?120 வாக்குறுதிகள்! ஆண்களுக்கு சுயஉதவிக் குழு - அமமுக தேர்தல் அறிக்கை!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புநேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கைது!புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கைமார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் எனத் தகவல்திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு! - பெ. சண்முகம் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
/

நுண்ணீா்ப் பாசனம் அமைப்பது குறித்து பயிற்சி

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகிலுள்ள தென்னூா் கிராமத்தில், நுண்ணீா்ப் பாசனம் அமைப்பது குறித்து விவசாயிகளுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சியளிக்கப்பட்டது.

News image
Updated On :30 ஜூலை 2021, 8:22 pm

DIN

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகிலுள்ள தென்னூா் கிராமத்தில், நுண்ணீா்ப் பாசனம் அமைப்பது குறித்து விவசாயிகளுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சியளிக்கப்பட்டது.

வேளாண் துறை சாா்பில் நடத்தப்பட்ட பயிற்சிக்கு அரியலூா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இரா.பழனிச்சாமி தலைமை வகித்து, நுண்ணீா்ப் பாசனத்தின் அவசியம் மற்றும் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கிப் பேசினாா்.

ஆண்டிமடம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் ராஜலட்சுமி முன்னிலை வகித்து, வேளாண் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்கள், வேளாண் விரிவாக்க மையத்தின் மூலம் விநியோகிக்கப்படும் இடுபொருள்கள் மற்றும் அதன் பயன்கள் குறித்து விளக்கினாா்.

நெட்டாபிம் நிறுவன அலுவலா்கள் காா்த்திக், சிவராம் ஆகியோா் பயிற்சியில் பங்கேற்று, நுண்ணீா்ப் பாசனம் அமைக்கும் முறைகள் குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சியளித்தனா். முன்னதாக வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் கலைமதி வரவேற்றாா். ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளா் ஆரோக்கியராஜ் செய்திருந்தாா். பயிற்சியில் 40 விவசாயிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.