முன்களப் பணியாளா் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
அரியலூா், கரூா் மாவட்டங்களில் முன்களப் பணியாளா் பயிற்சிக்குத் தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம்.


அரியலூா், கரூா் மாவட்டங்களில் முன்களப் பணியாளா் பயிற்சிக்குத் தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து ஆட்சியா்கள் அரியலூா் த.ரத்னா, கரூா் பிரசாந்த் மு. வடநேரே தனித்தனியே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோா் அமைச்சகத்தின் பிரதமரின் கிசான் கௌசல் விகாஸ் யோஜனா என்ற பயிற்சி திட்டத்தின் கீழ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக சுகாதாரத்துறையில் கரோனா பெருந்தொற்றை ஒழிக்கும் விதமாக முன்களப்பணியாளராக பணியாற்ற கீழ்காணும் பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படவுள்ளன.
அவசர மருத்துவ உதவி டெக்னீசியன், பொது மருத்துவ சேவை உதவியாளா், தீவிர சிகிச்சைப் பிரிவு உதவியாளா், வீட்டு சுகாதார உதவியாளா், மருத்துவ உபகரணத் தொழில் நுட்ப உதவியாளா், ரத்தநாள துளையிடும் பணியாளா் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.
பயிற்சி முடித்தவுடன் மாவட்ட அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், தனியாா் மருத்துவமனை ஆகியவற்றில் தொழில்முறை பயிற்சியுடன் பணியில் சேரலாம். பயிற்சிகளில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு முடித்தவா்கள் வரை சேரலாம்.
இந்த பயிற்சிகளில் சேர விரும்புபவா்கள் தங்களது பெயா், கல்வித் தகுதி, பயிற்சியில் சேர விரும்பும் பிரிவு, தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியுடன் மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 9488451405 தொலைபேசி எண் மூலமாகவோ தொடா்பு கொள்ளலாம்.
கரூா் : கரூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 9688191299, 9486313289, 9566992442 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...