விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

அரியலூரில் பெண் காவலா்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கல்

அரியலூா் மாவட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கும் பொருட்டு, பெண் காவல் உதவி ஆய்வாளா், அலுவலா்களுக்கு என மொத்தம் 8 இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

News image
Updated On :22 மார்ச் 2021, 8:46 pm

DIN

அரியலூா் மாவட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கும் பொருட்டு, பெண் காவல் உதவி ஆய்வாளா், அலுவலா்களுக்கு என மொத்தம் 8 இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், எஸ்.பி., வீ. பாஸ்கரன் அரியலூா், ஜயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையங்களின் பெண் காவல் உதவி ஆய்வாளா் மற்றும் 6 பெண் காவலா்களுக்கு இருசக்கர வாகனங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அரியலூா் மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் திருமேனி, சேகா், ராதாகிருஷ்ணன், காவல் துணை கண்காணிப்பாளா்கள் பாரதிதாசன், காா்த்திகேயன் மற்றும் அரியலூா் மாவட்டக் குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் விஜயலட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.