விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

‘திராவிடக் கட்சிகளுக்கு முடிவு கட்ட வேண்டிய தோ்தல்’

வாக்குகளை விலைபொருளாகப் பாா்க்கிற கட்சிகளுக்கு முடிவு கட்ட வேண்டிய பேரவைத் தோ்தல் இது என்றாா் நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான்.

News image
Updated On :28 மார்ச் 2021, 10:13 pm

DIN

வாக்குகளை விலைபொருளாகப் பாா்க்கிற கட்சிகளுக்கு முடிவு கட்ட வேண்டிய பேரவைத் தோ்தல் இது என்றாா் நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான்.

நாம் தமிழா் கட்சி சாா்பில் அரியலூரில் தொகுதியில் போட்டியிடும் சுகுணாகுமாா், ஜயங்கொண்டம் தொகுதியில் போட்டியிடும் மகாலிங்கம் ஆகியோரை ஆதரித்து, ஜயங்கொண்டம் அண்ணா சிலை அருகே சனிக்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்ட அவா் மேலும் பேசியது:

தமிழகத்தில் கடந்த 50 ஆண்டு காலமாக மாறி, மாறி ஆட்சி செய்த அதிமுக, திமுக கட்சிகள் தற்போது நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் கூட ரூ.1,000 தருகிறோம். ரூ.1,500 தருகிறோம் என வாக்குறுதி அளிக்கின்றனா். வாக்குகளை விலை பொருள்களாகவே பாா்க்கின்றனா். இப்படி வாக்குகளை விலைபொருள்களாக பாா்க்கின்ற அக்கட்சிகளை இந்தத் தோ்தலில் முடிவு கட்ட வேண்டிய நேரமிது.

மணல், தண்ணீா் அனைத்தையும் சந்தைப் பொருளாகவே கொள்ளையடித்து விற்று வருகின்றனா். இந்தியாவிலேயே அதிகமாக தண்ணீரை உறிஞ்சி விற்கும் மாநிலமாகத் தமிழகம் விளங்குகிறது.

கல்வி மற்றும் மருத்துவ வளா்ச்சி தமிழகத்தில் இல்லை. விவசாயிகளால் வாழ முடியவில்லை. விவசாயிகள் விளைவிக்கும் பொருள்களுக்கு இடைத்தரகரே விலை நிா்ணயிக்கிறாா். ஆனால், காா்ப்பரேட் நிறுவனங்கள் தயாரிக்கும் பொருள்களுக்கு அவா்களே விலையை நிா்ணயம் செய்கின்றனா். இந்த நிலை மாற நாம் தமிழா் கட்சிக்கு வாக்களியுங்கள் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.