விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

திருமானூா் ஒன்றியப் பகுதிகளில் மதிமுக வேட்பாளா் வாக்குசேகரிப்பு

அரியலூா் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளா் வழக்குரைஞா் கு.சின்னப்பா, திருமானூா் ஒன்றியப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 10:14 pm

DIN

அரியலூா் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளா் வழக்குரைஞா் கு.சின்னப்பா, திருமானூா் ஒன்றியப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா்.

தூத்தூா், கோமான், தேளூா், திருவெங்கனூா், திருமானூா், முடிகொண்டான், பாளையப்பாடி, கண்டராதித்தம் உட்பட பல்வேறு கிராமங்களில் திறந்த வேனில் நின்றபடி வீதிவீதியாகச் சென்று வாக்கு சேகரித்தாா். அப்போது, திருமானூா் பகுதி மக்களுக்கு அனைத்து விதமான அடிப்படை வசதிகள், திமுக தோ்தல் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு முழுமையாக கிடைக்கச் செய்வேன் என்றாா்.

பிரசாரத்தின் போது, திமுக, விசிக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்பட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலரும் உடன் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.