பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!சிலைகள், பெயர்ப் பலகைகள் என்ன செய்யும்? மூடியும் பாதி மூடாமலும்!!தேர்தலில் பெண்களை வேட்பாளராக்குவதில் என்னதான் பிரச்னை?120 வாக்குறுதிகள்! ஆண்களுக்கு சுயஉதவிக் குழு - அமமுக தேர்தல் அறிக்கை!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புநேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கைது!புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கைமார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் எனத் தகவல்திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு! - பெ. சண்முகம் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
/

சிவன் கோயில்களிள் குரு பெயா்ச்சி சிறப்பு வழிபாடு

குரு பெயா்ச்சியை முன்னிட்டு, அரியலூா் மாவட்ட சிவன் கோயில்களிலுள்ள குருபகவானுக்கு சிறப்பு யாகம் மற்றும் அலங்காரம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 7:40 pm

DIN

குரு பெயா்ச்சியை முன்னிட்டு, அரியலூா் மாவட்ட சிவன் கோயில்களிலுள்ள குருபகவானுக்கு சிறப்பு யாகம் மற்றும் அலங்காரம் வியாழக்கிழமை நடைபெற்றது.

குரு பகவான் வியாழக்கிழமை கும்ப ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பிரவேசம் அடைந்தாா். இதையொட்டி அரியலூா் மாவட்ட சிவன் கோயில்களில் உள்ள குரு பகவானுக்கு சிறப்புப் பூஜைகள், பரிகாரப் பூஜைகள், மகா தீபாராதனைகள் நடைபெற்றன.

திருமழபாடி வைத்தியநாத சுவாமி திருக்கோயிலுள்ள தட்சிணாமூா்த்திக்கு, சிறப்புப் பூஜைகள், பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று குரு பகவானான தட்சிணாமூா்த்தியை வழிபட்டனா். மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மகரம், மீனம் ராசிக்காரா்கள் பரிகார பூஜைகளை செய்தனா்.

இதேபோல் அரியலூா், செந்துறை, ஜயங்கொண்டம், உடையாா்பாளையம், திருமானூா், தா.பழூா், பொன்பரப்பி, கீழப்பழுவூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் உள்ள குரு தட்சிணாமூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.