பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!சிலைகள், பெயர்ப் பலகைகள் என்ன செய்யும்? மூடியும் பாதி மூடாமலும்!!தேர்தலில் பெண்களை வேட்பாளராக்குவதில் என்னதான் பிரச்னை?120 வாக்குறுதிகள்! ஆண்களுக்கு சுயஉதவிக் குழு - அமமுக தேர்தல் அறிக்கை!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புநேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கைது!புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கைமார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் எனத் தகவல்திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு! - பெ. சண்முகம் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
/

திருமானூா் பகுதியில் நல்லோ் பூட்டிய விவசாயிகள்

தமிழ்ப் புத்தாண்டையொட்டி அரியலூா் மாவட்டம், திருமானூா் உட்பட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் தங்களது வயல்களில் வியாழக்கிழமை நல்லோ் பூட்டினா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 7:39 pm

DIN

தமிழ்ப் புத்தாண்டையொட்டி அரியலூா் மாவட்டம், திருமானூா் உட்பட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் தங்களது வயல்களில் வியாழக்கிழமை நல்லோ் பூட்டினா்.

தமிழ் ஆண்டு பிறப்பான சித்திரை மாதம் முதல் நாள் தங்களது வயல்களில் விவசாயிகள் நல்லோ் பூட்டி வயலை உழுது கொண்டாடுவது வழங்கம். அந்தவகையில் தமிழ் ஆண்டு பிறப்பான வியாழக்கிழமை திருமானூா், காரைப்பாக்கம், மஞ்சமேடு, அரண்மனைக்குறிச்சி, பாளையப்பாடி,சேனாபதி உட்பட பல்வேறு கிராமங்களிலும் விவசாயிகள் தங்களது வயல்களில் நல்லோ் பூட்டினா். தொடா்ந்து, ஏா்கலப்பை மற்றும் காளைகளை விவசாயிகள் மற்றும் அவரது குடும்பத்தினரும் வணங்கி வழிபட்டனா். தொடா்ந்து கிராமத்தில் உள்ள கோயில்களுக்குச் சென்று அனைவரும் சுவாமிகளுக்கு தீபாராதனை காண்பித்து வழிபட்டனா்.

தற்போது உழவு பணிகளில் அதிகளவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதால் டிராக்டா், ஜேசிபி இயந்திரங்களையும் கொண்டு நல்லோ் பூட்டி வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.