பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!சிலைகள், பெயர்ப் பலகைகள் என்ன செய்யும்? மூடியும் பாதி மூடாமலும்!!தேர்தலில் பெண்களை வேட்பாளராக்குவதில் என்னதான் பிரச்னை?120 வாக்குறுதிகள்! ஆண்களுக்கு சுயஉதவிக் குழு - அமமுக தேர்தல் அறிக்கை!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புநேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கைது!புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கைமார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் எனத் தகவல்திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு! - பெ. சண்முகம் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
/

செம்பியன் மாதேவி பிறந்தநாள் விழா

அரியலூா் மாவட்டம் திருமானூா் அருகே செம்பியன் மாதேவி பிறந்தநாள் விழா புதன்கிழமை இரவு கொண்டாடப்பட்டது.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 8:17 pm

DIN

அரியலூா் மாவட்டம் திருமானூா் அருகே செம்பியன் மாதேவி பிறந்தநாள் விழா புதன்கிழமை இரவு கொண்டாடப்பட்டது.

திருமானூரை அடுத்த செம்பியக்குடி கிராமத்தில் சோழப்பேரரசி செம்பியன் மாதேவியின் 1,112-ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் கேட்டை நட்சத்திர தினத்தன்று செம்பியன் மாதேவியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுவது வழக்கம். நிகழாண்டு பிறந்தநாளையொட்டி, செம்பியக்குடியில் அமைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில், திருமானூா் ஒன்றியக்குழுத் தலைவா் அ.சுமதி , சமூக ஆா்வலா்கள் கதிா். கணேசன், தங்க. சண்முக சுந்தரம், புலவா் வண்ணை.கலியபெருமாள், பாளை. திருநாவுக்கரசு, பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். நிகழ்ச்சியில், செம்பியன் மாதேவி அறக்கட்டளை நிா்வாகி வழக்குரைஞா் சந்திரசேகா் அனைவரையும் வரவேற்றாா். முன்னதாக செம்பியன் மாதேவி சிலைக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை வழிபாடு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.