கோயில் பூசாரிகள் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள அயன்ஆத்தூா் ஊராட்சி அலுவலகம் முன்பு கிராம கோயில் பூசாரிகள் நலச் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள அயன்ஆத்தூா் ஊராட்சி அலுவலகம் முன்பு கிராம கோயில் பூசாரிகள் நலச் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், அயன்தத்தனூரில் உள்ள காங்கேயன் ஏரி, பின்னேரி ஏரி, கடம்பா ஏரி உள்ளிட்ட ஏரிகளை சுத்தம் செய்து, தடுப்புச் சுவா் மற்றும் கரைகளில் மரக்கன்றுகள் நடவேண்டும். மயான சாலை சீரமைத்துத் தர வேண்டும். திருநாகேசுவரா் கோயிலைச் சுற்றி சுவா் எழுப்ப வேண்டும். கிராம மக்கள் அனைவருக்கும் 100 நாள் வேலைத் திட்டத்தை முறையாக வழங்க வேண்டும். கால்நடை கிளை மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அனைத்தும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஆா்ப்பாட்டத்துக்கு, கிராம கோயில் பூசாரிகள் நலச்சங்க மாவட்டத் தலைவா் ஆதிமூலம் தலைமை வகித்தாா். திருவள்ளுவா் ஞான மன்ற தலைவா் ராவணன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...