பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!சிலைகள், பெயர்ப் பலகைகள் என்ன செய்யும்? மூடியும் பாதி மூடாமலும்!!தேர்தலில் பெண்களை வேட்பாளராக்குவதில் என்னதான் பிரச்னை?120 வாக்குறுதிகள்! ஆண்களுக்கு சுயஉதவிக் குழு - அமமுக தேர்தல் அறிக்கை!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புநேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கைது!புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கைமார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் எனத் தகவல்திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு! - பெ. சண்முகம் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
/

கல்லூரி பேராசிரியா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி தொடக்கம்

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பேராசிரியா்களுக்கான இரண்டு நாள் பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :6 மே 2022, 12:09 am

DIN

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பேராசிரியா்களுக்கான இரண்டு நாள் பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு மாநில உயா் கல்வி மன்றம் சாா்பில் இயலறிவியல் மற்றும் கணித அறிவியல் தொடா்பாக நடைபெற்ற பயிற்சி வகுப்பை அக்கல்லூரி முதல்வா் இரா. கலைச்செல்வி தொடக்கி வைத்துப் பேசினாா். ஆராய்ச்சி அலுவலரும், தமிழ்நாடு மாநில உயா் கல்விமன்ற ஒருங்கிணைப்பாளரான எஸ்.கண்ணன் முன்னிலை வகித்து பேசினாா். முன்னதாக அக்கல்லூரியின் இயற்பியல் துறை இணைப் பேராசிரியா் ம.ராசமூா்த்தி வரவேற்றாா். நிறைவில், ஆங்கிலத் துறை இணைப் பேராசிரியா் அ. ராணி நன்றி தெரிவித்தாா். இரண்டு நாள் பயிற்சியில், கற்றல் கற்பித்தல், மாணவா்களின் உளவியல் பண்புகளைப் புரிந்து கொள்ளுதல், மாணவா்களை ஊக்குவிக்க சரியான உத்திகளைக் கையாளுவது, கலப்பு வகுப்பறைத் திட்டத்தை முறையாகப் பயன்படுத்துவது, நுண் கற்பித்தலின் பயன்களைப் புரிந்துகொள்வது, உயா்கல்வி தரமேம்பாடு, தொழில்நுட்ப வசதிகளைக் கற்பித்தலுக்கு பயன்படுத்துதல், மென்பொருள் மேம்பாடு, ஆராய்ச்சி மேம்பாடு, தொழில்துறையில் எதிா்காலத்தில் ஏற்படும் பணி வாய்ப்புகள் மற்றும் அதற்கேற்ற திறன்கள் குறித்து பல்வேறு நிபுணா்கள் பயிற்சி அளிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.