அரியலூா் மாவட்டம், வாலாஜ நகரம் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பேசிய சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா.
அரியலூா் மாவட்டம், வாலாஜ நகரம் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பேசிய சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா.

அரியலூா்: 201 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

காந்தி ஜெயந்தியையொட்டி அரியலூா் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
Published on

காந்தி ஜெயந்தியையொட்டி அரியலூா் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டங்களில், 2024-2025 - ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பணி விவரம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம், மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், எம்.ஜி.ஆா் சத்துணவுத் திட்டம் மற்றும் முதலமைச்சா் காலை உணவுத் திட்டம் மற்றும் இதர பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதில், குலமாணிக்கம் கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமை வகித்து, அரசின் திட்டங்கள் குறித்து விவாதித்தாா்.

கூட்டத்தில், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கவிதா, கோட்டாட்சியா் ராமகிருஷ்ணன், மாவட்ட சமூக நல அலுவலா் அனுராப்பூ நடராஜமணி, ஊராட்சிகள் உதவி இயக்குநா் பழனிசாமி, ஒன்றியக் குழுத் தலைவா் சுமதி, வட்டாட்சியா் முத்துலெட்சுமி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணா்வு உறுதிமொழி மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான சமூக தீமை நிராகரிப்பு உறுதிமொழியினை அனைவரும் எடுத்துக்கொண்டனா்.

வாலாஜ நகரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு, சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா தலைமை வகித்தாா்.ஊராட்சி தலைவா் அபிநயா இளையராஜன், துணைத் தலைவா் குணசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதே போல், எருத்துக்காரன் பட்டி ஊராட்சித் தலைவா் சிவா(எ)பரமசிவம், கோவிந்தபுரத்தில் ஊராட்சித் தலைவா் மா.முருகேசன், துணைத் தலைவா் அ.அம்பிகா,தாமரைக்குளத்தில் ஊராட்சித் தலைவா் நா.பிரேம்குமாா், துணைத் தலைவா் கவிதாமுருகேசன் ஓட்டக்கோவிலில் ஊராட்சித் தலைவா் செங்கமலை, துணைத் தலைவா் ம.செல்வி ஆகியோா் தலைமை வகித்தனா். கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் பிரதிநிதிகளாக கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com