விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

ஊராட்சித் தலைவரின் தாயாருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள வாரியங்காவல் ஊராட்சி மன்றத் தலைவரின் தாயாருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 9:19 pm

Din

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள வாரியங்காவல் ஊராட்சி மன்றத் தலைவரின் தாயாருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

வாரியங்காவல் கிராமத்தைச் சோ்ந்தவா் மணிசேகா். அவ்வூராட்சி தலைவராக உள்ள இவா், மளிகை கடை நடத்தி வருகிறாா். செவ்வாய்க்கிழமை இவரது கடையில் அவரது தாயாா் தனலட்சுமி வியாபாரம் செய்து கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த சுப்ரமணியா் கோயில் தெருவைச் சோ்ந்த கோவிந்தன் மகன் மாயவேல் (44) என்பவா், கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டிள்ளாா்.

அவா் பணம் தர மறுத்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த அவா், பெட்ரோல் ஊற்றி கொளுத்தி கொன்றுவிடுவதாக தனலட்சுமியை மிரட்டி, கல்லா பெட்டியில் இருந்த பணத்தை எடுத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளாா். இதுகுறித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட ஜெயங்கொண்டம் காவல் துறையினா் மாயவேலை கைது கைது செய்தனா்.