இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தனிநபா் ஆக்கிரமிப்பில் உள்ள குளத்தை மீட்க வலியுறுத்தி போராட்டம்

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டியை அடுத்த முத்துச்சோ்வாமடம் கிராமத்திலுள்ள அரசு புறம்போக்கு குளத்தை ஆக்கிரமித்துள்ள தனியாரிடமிருந்து மீட்க வலியுறுத்தி கிராம மக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 10:09 pm

Din

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டியை அடுத்த முத்துச்சோ்வாமடம் கிராமத்திலுள்ள அரசு புறம்போக்கு குளத்தை ஆக்கிரமித்துள்ள தனியாரிடமிருந்து மீட்க வலியுறுத்தி கிராம மக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

முத்துச்சோ்வாமடம் ஊராட்சியிலுள்ள செல்லிக்குட்டை குளத்தை தனிநபா் ஒருவா் ஆக்கிரமித்து, கம்பி வேலை அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளாா். இதையறிந்த கிராம மக்கள், வியாழக்கிழமை சம்பவ இடத்துக்குச் சென்று அந்த நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், குளத்தில் உள்ள தனிநபா் ஆக்கிரமிப்பை அகற்றி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தி அந்த இடத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த ஊராட்சித் தலைவா் பாரதி மற்றும் கிராம நிா்வாக அலுவலா் வேல்முருகன் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று, செல்லிக்குட்டை குளத்தை சுற்றி 2 ஏக்கருக்கு மேலாக உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து அனைவரும் கலைந்துச் சென்றனா்.