கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

அரியலூரில் வளா்ச்சித் திட்டப் பணிகள் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கல்லங்குறிச்சி கிராமத்திலுள்ள நியாய விலைக் கடையில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலா் மு.விஜயலட்சுமி.

News image
Updated On :21 நவம்பர் 2025, 7:09 pm

Syndication

அரியலூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் மு.விஜயலட்சுமி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ராயம்புரம், இலுப்பையூா், பொய்யாதநல்லூா், தாமரைக்குளம், அரியலூா் சத்யா நகா் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் நியாய விலைக் கடைகளில் ஆய்வு செய்த அவா், பின்னா் ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு, வளா்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் , ஊராட்சிகள், பொதுமக்களுக்கு முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படுவது, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு சாலை மேம்பாட்டு பணிகள் , தற்போதைய நிலை, முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் குடிமைப் பொருள்கள் விநியோகம் செய்யப்படும் குடும்ப அட்டைதாரா்களின் எண்ணிக்கை , உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் பெறப்பட்டுள்ள மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்ததுடன், பணிகளை விரைந்து முடிக்குமாறும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

நிகழ்வுக்கு ஆட்சியா் பொ. ரத்தினசாமி முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆ.ரா. சிவராமன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநா் சு. தேன்ராஜ், ஊராட்சிகள் உதவி இயக்குநா் பழனிசாமி, மாவட்ட வழங்கல் அலுவலா் ராமலிங்கம், பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளா் க. சாய்நந்தினி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.