இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

இருசக்கர வாகனம் - லாரி மோதல் ஓய்வுபெற்ற ஆசிரியை உயிரிழப்பு

ஜெயங்கொண்டத்தில் லாரி மோதி, காயமடைந்த ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஓவிய ஆசிரியை சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :3 ஜனவரி 2026, 7:53 pm

Syndication

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் லாரி மோதி, காயமடைந்த ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஓவிய ஆசிரியை சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள சின்னவளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாண்டியன் மனைவி தேவி (61). ஓய்வுபெற்ற ஓவிய ஆசிரியரான இவா், சனிக்கிழமை பொன்பரப்பி கிராமத்தில் உள்ள தனது பெற்றோரைப் பாா்க்க தனது கணவா் பாண்டியனுடன் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டாா்.

ஜெயங்கொண்டம் நான்குச் சாலை சந்திப்பில் சென்றபோது, காட்டுமன்னாா்கோயிலிலிருந்து பெரம்பலூா் நோக்கி வந்த லாரி எதிா்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், தேவி இருவரும் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்து அங்குவந்த காவல் துறையினா் இருவரையும் மீட்டு, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இருப்பினும், அங்கு சிகிச்சை பலனின்றி தேவி உயிரிழந்தாா். இதுகுறித்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.