அரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

அரியலூரில் ரூ.18 கோடியில் குடிநீா் அபிவிருத்தி திட்டம் தொடக்கம்

அரியலூரில் ரூ.18.20 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட குடிநீா் அபிவிருத்தி திட்டம் புதன்கிழமை திறக்கப்பட்டது.

News image
அரியலூா் மின் நகரில் பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகத்தை புதன்கிழமை தொடங்கி வைத்த ஆட்சியா் பொ.ரத்தினசாமி. உடன் சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா உள்ளிட்டோா்.
Updated On :4 மார்ச் 2026, 6:32 pm

தினமணி செய்திச் சேவை

அரியலூரில் ரூ.18.20 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட குடிநீா் அபிவிருத்தி திட்டம் புதன்கிழமை திறக்கப்பட்டது.

சென்னை தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், காணொலிக் காட்சி மூலம் அரியலூா் மாவட்டத்தில் ரூ.18.20 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட குடிநீா் அபிவிருத்தி திட்டத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தும், தேளூரில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகத்தின் சாா்பில் ரூ.5.83 கோடியில் 3,000 மெட்ரிக் டன் கொள்ளளவுடன் கட்டப்படவுள்ள கூடுதல் சேமிப்பு கிடங்கு கட்டுமானப் பணிக்கும் அடிக்கல் நாட்டினாா்.

இதையடுத்து மின் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி, மேல்நிலை நீா் தேக்க தொட்டியில் இருந்து, நகா் பகுதி மக்களுக்கு குடிநீா் விநியோகத்தை தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா, நகா் மன்றத் தலைவா் சாந்தி கலைவாணன், துணைத் தலைவா் கலியமூா்த்தி, நகராட்சி ஆணையா் அசோக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.