குடிநீர் கோரி பொரணி கிராம மக்கள் மறியல்

குடிநீர் கேட்டு பொரணி கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஜெகதாபி-உப்பிடமங்கலம் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Updated on
1 min read

குடிநீர் கேட்டு பொரணி கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஜெகதாபி-உப்பிடமங்கலம் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கரூர் மாவட்டம் வெள்ளியணை அடுத்த ஜெகதாபி ஊராட்சிக்குட்பட்ட பொரணி கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறார்கள்.  இப்பகுதியினருக்கு ஜெகதாபி ஊராட்சி சார்பில்  ஆழ்குழாய்க் கிணறு அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக  குடிநீர் விநியோகம் செய்யப்படாததால்  அப்பகுதியினர் ஊராட்சி நிர்வாகத்திடம் கூறியும்  நடவடிக்கை இல்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியினர் புதன்கிழமை காலை ஜெகதாபி-உப்பிடமங்கலம் சாலையில் பொரணி பேருந்து நிறுத்தம் முன் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தகவலறிந்த வெள்ளியணை போலீஸார் மற்றும் ஜெகதாபி ஊராட்சி செயலர் சுப்ரமணியன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி, கூடுதலாக இப்பகுதியில் 5 ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து குடிநீர் சீராக விநியோகிக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com