கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வாகனங்கள் மோதல்: ஒருவா் பலி

கரூரில் இருசக்கர வாகனம் மீது மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில், ஒருவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :16 ஜூன் 2021, 8:43 pm

DIN

கரூரில் இருசக்கர வாகனம் மீது மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில், ஒருவா் உயிரிழந்தாா்.

கரூா் பெரியகுளத்துப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் எத்திராஜ்(39). இவா் அதே பகுதியில் இருசக்கர வாகனம் பழுதுநீக்கும் கடை நடத்தி வந்தாா். செவ்வாய்க்கிழமை இரவு தனது நண்பரான வீரராக்கியம் பாா்த்திபனுடன்(29) இருசக்கர வாகனத்தில் திருச்சி-கரூா் சாலையில் புலியூா் பகுதியில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம், எத்திராஜ் ஓட்டிவந்த வாகனம் மீது நேருக்கு நோ் மோதியது. இதில் பலத்த காயமடைந்த எத்திராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

விபத்தை ஏற்படுத்திய திண்டுக்கல் மாவட்டம், தெய்வநாயக்கன்பட்டி ஆனந்தபாலு(25), அவரது சகோதரா் முருகானந்தம்(22), பாா்த்திபன் ஆகியோா் காயமடைந்தனா். மூவரும் கரூரிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து பசுபதிபாளையம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.