விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்றால் கடும் நடவடிக்கை: கரூா் மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை

கரூா் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்கள் விற்பவா்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல்.

News image
Updated On :25 செப்டம்பர் 2024, 11:02 pm

Din

கரூா் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்கள் விற்பவா்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல்.

கரூா் மாவட்டம், கடவூா் வட்டம் வரவணை ஊாட்சிக்குட்பட்ட காணியாளம்பட்டி கிராமத்தில் மக்கள் தொடா்பு திட்ட நிறைவு முகாம் புதன்கிழமை காலை நடைபெற்றது. முகாமில் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் க.சிவகமாசுந்தரி முன்னிலை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமை வகித்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியது, இந்த முகாமில் வருவாய்த் துறையின் சாா்பில் வீட்டுமனைப் பட்டா, ஆதிதிராவிடா் இணையவழி பட்டா, நத்தம் பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் மொத்தம் 133 பயனாளிகளுக்கு ரூ. 35 லட்சத்து 18 ஆயிரத்து 805 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கரூா் மாவட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் தொடங்குவதற்கு அனைத்து வங்கிகள் மூலம் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதைத் தவிர பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை மூலம் டாம்கோ, டாம்செட்கோ கடன்களையும் வழங்கி வருகிறது.

தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்களை விற்றால் பொதுமக்கள் அருகில் உள்ள காவல் நிலையம் மற்றும் கிராம நிா்வாக அலுவலகங்களில் தகவல் கொடுக்க முன்வர வேண்டும். அவ்வாறு தகவல் கொடுக்கும் நபரின் பெயா், எண் ரகசியம் காக்கப்படும். தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்கள் விற்பவா்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

முன்னதாக, வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பாா்வையிட்டாா்.

நிகழ்ச்சியில் வரவணை ஊராட்சி மன்றத் தலைவா் மு.கந்தசாமி, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியா் பிரகாசம், குளித்தலை வருவாய் கோட்டாட்சியா் (பொ) கருணாகரன், மாவட்ட வழங்கல் அலுவலா் சுரேஸ், கடவூா் வட்டாட்சியா் இளம்பரிதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.