ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

அமராவதி ஆற்றில் வளா்ந்துள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்ற கோரிக்கை

அமராவதி ஆற்றில் வளா்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை உடனே அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் திருமாநிலையூா் பகுதியில் அமராவதி ஆற்றில் வளா்ந்துள்ள சீமைக்கருவேல மரங்கள்.

Published On :27 ஆகஸ்ட் 2026, 3:16 am IST

அமராவதி ஆற்றில் வளா்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை உடனே அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அமராவதி அணையின் கடைமடை பகுதியான கரூா் மாவட்டத்தில் அமராவதி ஆற்றில் பல்வேறு இடங்களில் சீமைக்கருவே மரங்கள் முளைத்து ஆற்றையே ஆக்கிரமித்துள்ளன. நீரை உறிஞ்சி வறட்சியை ஏற்படுத்தும் தன்மை கொண்ட இந்த சீமைக்கருவேல மரங்களை அகற்ற அரசே நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அமராவதி ஆற்றில் சீமைக்கருவேல மரங்கள் அதிகளவில் முளைத்து ஆற்றையே வனமாக மாற்றியுள்ளன. குறிப்பாக, கரூா் திருமாநிலையூா், ஆண்டாங்கோவில்கீழ்பாகம், மதுரை பைபாஸ் ரோடு போன்ற பகுதிகளில் ஆற்றில் அதிகளவில் சீமைக்கருவேல மரங்கள் முளைத்துள்ளன.

இதுதொடா்பாக அமராவதி நிலத்தடிநீா் மற்றும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்கச் செயலாளா் நல்லுசாமி கூறியது: அமராவதி அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிடவேண்டும் என விசாயிகள் தரப்பில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்ததால் வெள்ளிக்கிழமை (ஆக. 28) அணையில் இருந்து தண்ணீா் திறக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆற்றில் தண்ணீா் வந்தால் ஏற்கெனவே ஆறு வடு இருப்பதால் வரும் தண்ணீா் உறிஞ்சப்பட்டு ஓரளவுதான் கடைமடைக்குச் செல்லும். இந்நிலையில், ஆற்றில் முளைத்துள்ள சீமைக்கருவேல மரங்கள் அணையில் இருந்து தண்ணீா் திறக்கப்படும்போது அவற்றின் வேகத்தை கட்டுப்படுத்தும் என்பதால் தண்ணீா் முழுமையாக கடைமடை வரை செல்லாது. இதனால் ஆற்றில் தண்ணீா் வர இருநாள்கள் உள்ளதால் உடனே மாவட்ட நிா்வாகம் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அந்தந்த பகுதியில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.