தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

கரூரில் காரில் கடத்தி வரப்பட்ட ரூ. 30 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

கரூரில் காரில் கடத்தி வரப்பட்ட கஞ்சா மற்றும் கைதான இளைஞா்கள்.

Published On :

கரூரில் காரில் கடத்தி வரப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக தேனியைச் சோ்ந்த இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கரூா் மாவட்டம், தவிட்டுப்பாளையம் சோதனைச் சாவடியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனா். காருக்குள் 2 கிலோ பொட்டலங்களாக மொத்தம் 15 பொட்டலங்களில் 30 கிலோ உயா் ரக கஞ்சா இருப்பது தெரியவந்தது.

அவா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தியதில், காரில் கஞ்சா கடத்தி வந்தவா்கள் தேனியைச் சோ்ந்த இரு இளைஞா்கள் என்பதும், அவா்கள் பெங்களூருவில் இருந்து மதுரைக்கு காரில் கடத்திச் செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து, ரூ.30 லட்சம் மதிப்புள்ள கஞ்சா மற்றும் கஞ்சா கடத்தி வர பயன்படுத்திய காா் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து இருவரிடமும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.