பெரம்பலூர் நகரில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளை நகராட்சி பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை அகற்றினர்.
தமிழகம் முழுவதும் அரசு அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பரப் பதாகைகளை அகற்றுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டதையடுத்து, மாநிலம் முழுவதும் அத்தகைய விளம்பரப் பதாகைகள் அகற்றப்படுகின்றன.
பெரம்பலூர் நகரில் பல்வேறு இடங்களில் அளவுக்கு அதிகமாக விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் அண்மையில் நடைபெற்ற போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில்அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளையும் அகற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா உத்தரவையடுத்து, பெரம்பலூர் பாலக்கரை, சங்குபேட்டை, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளை நகராட்சி பணியாளர்கள் அகற்றினர். அனுமதியின்றி பொது இடங்களில் வைக்கப்படும் விளம்பரப் பதாகைகளை அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்பணி தொடரும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
சித்தராமையா ராஜிநாமா செய்ய காங்கிரஸ் மேலிடம் அழுத்தம்?

விடைத்தாள் மதிப்பீடு இணையதளப் பக்கம் ஹேக் செய்யப்படவில்லை: சிபிஎஸ்இ
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


