பெரம்பலூர் மாவட்டத்திற்குள்பட்ட குரும்பலூர், செட்டிக்குளம் அரசுப் பள்ளிகளில் சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் செவ்வவாய்க்கிழமை நடைபெற்றது.
ஆலத்தூர் வட்டம், செட்டிக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமைப்படை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியை தலைமை ஆசிரியர் பெ. நாகமணி தொடங்கி வைத்தார். மாணவ, மாணவியர் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கைகளில் ஏந்தி முழக்கமிட்டு சென்றனர்.
முன்னதாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டி, வினாடி- வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, இந்துஸ்தான் பெட்ரோலிய கார்ப்பரேஷன் நிறுவனத்தின் திருச்சி மண்டல விற்பனை மேலாளாகள் தினேஷ், சாரங்கி ஆகியோர் பரிசுகள் வழங்கினர். தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ப. ராமன், சாரண, சாரணிய அமைப்பின் மாவட்ட உதவிச் செயலர் த. தனபால், ஆசிரிய, ஆசிரியைகள் பங்கேற்றனர். முன்னதாக, இளையோர் செஞ்சிலுவைச் சங்க மாவட்ட கன்வீனர் வெ. ராதாகிருஷ்ணன் வரவேற்றார். பசுமைப்படை ஒருங்கிணைப்பாளரும், பேரிடர் மேலாண்மை மாநில பயிற்றுநருமான தே. பாஸ்கர் நன்றி கூறினார். அதேபோல, குரும்பலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பிளாஸ்டிக் மாசுவை முறியடிப்போம் எனும் தலைப்பில் உலச் சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








