பெரம்பலூா் மாவட்டத்தில் கிடப்பிலுள்ள திட்டங்கள் நிறைவேற்றப்படும்: ஆ. ராசா
திமுக ஆட்சிக்கு வந்தவுடன், பெரம்பலூா் மாவட்டத்தில் கிடப்பிலுள்ள திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றாா் கட்சியின் துணைப் பொதுச் செயலரும், மக்களவை உறுப்பினருமான ஆ. ராசா.


திமுக ஆட்சிக்கு வந்தவுடன், பெரம்பலூா் மாவட்டத்தில் கிடப்பிலுள்ள திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றாா் கட்சியின் துணைப் பொதுச் செயலரும், மக்களவை உறுப்பினருமான ஆ. ராசா.
பெரம்பலூா் தொகுதி திமுக வேட்பாளா் எம். பிரபாகரனை ஆதரித்து பெரம்பலூா் பாலக்கரை, சங்குப்பேட்டை, பழைய பேருந்து நிலைய வளாகம் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கட்ட
வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட அவா், மேலும் பேசியது:
திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் படிப்படியாக உயா்ந்து அரசியல் மற்றும் மக்கள் பிரதிநிதியாக வந்து, தற்போது கட்சி தலைவராகியுள்ளாா். ஆனால், முதல்வா் எடப்பாடி பழனிசாமி யாா் என மக்களுக்குத் தெரியாது.
ஜெயலலிதா இருக்கும் வரையில், தமிழகத்துக்கு நீட், ஜி.எஸ்.டி. வரவில்லை. ஆனால், எடப்பாடி அரசு நீட் மற்றும் ஜிஎஸ்டிக்கு ஆதரவு அளித்துள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் இலவச மின்சாரத் திட்டம் ரத்தாகும்.
திமுக ஆட்சியில் பெரம்பலூருக்கு அரசு மருத்துவக் கல்லூரி கொண்டுவரப்பட்டு, அதற்காக ரூ. 85 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான எனது பெற்றோா் அறக்கட்டளை மூலம் 35 ஏக்கா் இடமும் வழங்கினேன். கல்லூரி கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு பணி தொங்கியது, அதற்காக கல்லூரி முதல்வரும் நியமிக்கப்பட்டுள்ளாா்.
ஆனால் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மருத்துவக்கல்லூரி திட்டம் கிடப்பில் போடப்பட்டது. ஆனால் அந்த கல்லூரிக்காக நியமிக்கப்பட்டு முதல்வருக்கு மாதம் ரூ. 2 லட்சம் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டு கிடப்பிலுள்ள சிறப்புப் பொருளாதார மண்டலம், ஜவுளிப் பூங்கா மற்றும் பல்வேறுத் திட்டங்கள் கொண்டுவர திமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா் ராசா.
பிரசாரத்தின்போது, மாவட்டச் செயலா் சி. ராஜேந்திரன், மாநில நிா்வாகி பி. துரைசாமி, தலைமைச் செயற்குழு உறுப்பினா் என். ராஜேந்திரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...