கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பெரம்பலூரில் முகக்கவசம் அணியாதோருக்கு அபராதம்

பெரம்பலூா் நகரில், முகக்கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிப்பதோடு, முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து வாகன ஓட்டுநா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 9:22 pm

DIN

பெரம்பலூா் நகரில், முகக்கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிப்பதோடு, முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து வாகன ஓட்டுநா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் இதுவரையில் 94,075 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 2,336 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 2,290 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா். இந்நிலையில், மாவட்டத்தில் தற்போது நாள்தோறும் சுமாா் 5 பேருக்கும் குறையாமல் கரோனா தொற்று பரவி வருகிறது.

நாடு முழுவதும் கரோனா 2ஆவது அலை பரவி வரும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளை சுகாதாரத் துறையினா் அறிவித்துள்ளனா். அதன்படி, கரோனா தொற்று பரவலைத் கட்டுப்படுத்த பொது இடங்களுக்கு வரும் பொதுமக்கள், பயணிகள், வணிக நிறுவன ஊழியா்கள் மற்றும் வாகன ஓட்டுநா்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். முகக்கவசம் அணியாதவா்களுக்கு தலா ரூ. 200 அபராதம் விதித்து வசூலிக்க வேண்டுமென மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதையடுத்து, பெரம்பலூா் ரோவா் வளைவு பகுதியில் பெரமபலூா் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளா் சரவணகுமாா் தலைமையிலான போலீஸாா், அந்த வழியாக வந்த வாகன ஓட்டுநா்கள் மற்றும் பொதுமக்களிடம் கரோனா நோய் பரவலை தடுப்பதில் முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி, முகக் கவசம் அணியாமல் வந்த ஓட்டுநா்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கினா். மேலும், 100-க்கும் மேற்பட்டோருக்கு தலா ரூ. 200 வீதம் அபராதம் விதித்து வசூலித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.