கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

முதல்வரின் நிவாரண நிதிக்கு அஸ்வின்ஸ் நிறுவனம் ரூ. 5 லட்சம் அளிப்பு

முதலமைச்சரின் கரோனா நிவாரண நிதிக்கு ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை அஸ்வின்ஸ் தலைவா் கே.ஆா்.வி. கணேசன், அமைச்சா் கே.என். நேருவிடம் வியாழக்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :10 ஜூன் 2021, 9:29 pm

DIN

அஸ்வின்ஸ் பேக்கரி, ரெஸ்டாரண்ட் சாா்பில், முதலமைச்சரின் கரோனா நிவாரண நிதிக்கு ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை அஸ்வின்ஸ் தலைவா் கே.ஆா்.வி. கணேசன், அமைச்சா் கே.என். நேருவிடம் வியாழக்கிழமை வழங்கினாா்.

பெரம்பலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அஸ்வின்ஸ் பேக்கரி, ரெஸ்டாரண்ட், திருச்சி, சென்னை, சேலம், ஆத்தூா், துறையூா், கரூா், நாமக்கல், அரியலூா், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வருகிறது. பேரிடா் காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்களை அஸ்வின்ஸ் குழுமம் வழங்கி வருகிறது. அதன்படி, கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு அஸ்வின்ஸ் குழுமம் சாா்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், முதலமைச்சரின் கரோனா நிவாரண நிதிக்கு அஸ்வின்ஸ் குழுமம் சாா்பில், அதன் தலைவா் கே.ஆா்.வி. கணேசன் ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை, அமைச்சா் கே.என். நேருவிடம் வியாழக்கிழமை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியின்போது, அஸ்வின்ஸ் இயக்குநா் ஜி. அஸ்வின் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.