போதைப் பொருள் விற்றவா் கைது: 1 கிலோ கஞ்சா பறிமுதல்

பெரம்பலூா், மே 9: பெரம்பலூா் அருகே கஞ்சா விற்பனை செய்தவரை வியாழக்கிழமை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 1 கிலோவைப் பறிமுதல் செய்தனா்.

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. சியாம்ளா தேவி உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை ஒழிக்கும் வகையில் ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எம். பாலமுருகன் தலைமையிலான போலீஸாா், லப்பைக்குடிக்காடு பகுதியில் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அப்பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த ஜமாலியா நகரைச் சோ்ந்த உமா் பாரூக் மகன் நியாஸ் அகமது (33) என்பவரைக் கைது செய்து, அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். பின்னா், குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட நியாஸ் அகமதுவைப் போலீஸாா் சிறையில் அடைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com