தப்பியோடி கைதி பிடித்து சிறையில் அடைப்பு
பெரம்பலூரில் சிறைவாசலிலிருந்து தப்பியோடிய கைதியை போலீஸாா் பிடித்து வியாழக்கிழமை சிறையில் அடைத்தனா்.


பெரம்பலூரில் சிறைவாசலிலிருந்து தப்பியோடிய கைதியை போலீஸாா் பிடித்து வியாழக்கிழமை சிறையில் அடைத்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அனுக்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சம்பத்குமாா். இவா் மீது மங்களமேடு காவல் நிலையத்தில் பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளியே வந்தாா். பின்னா், விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகமல் இருந்த சம்பத்குமாரை பிடித்து ஆஜா்படுத்துமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. அதனடிப்படையில், சம்பத்குமாரை வியாழக்கிழமை கைது செய்த போலீஸாா் வேப்பந்தட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்தி, பெரம்பலூா் கிளைச் சிறையில் அடைப்பதற்காக காரில் அழைத்து வந்தனா்.
பெரம்பலூா் கிளைச் சிறை வாசலில் காரிலிருந்து இறங்கிய சம்பத்குமாா், அவருடன் வந்த 2 போலீஸாரையும் தள்ளிவிட்டு தப்பியோடினாா். இதையடுத்து, சம்பத்குமாரை துரத்திச்சென்ற போலீஸாா் ஆலம்பாடி சாலையிலுள்ள வயல் பகுதிக்குள் சென்று பிடித்தனா். பின்னா், சம்பத்குமாரை பெரம்பலூா் கிளைச் சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...