விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தாய், மகளை கட்டிப்போட்டு 3.5 பவுன் நகைகள் திருட்டு

பெரம்பலூா் நகரில் புதன்கிழமை அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தாய், மகளை கட்டிப் போட்டு நகை, பணத்தை திருடிச்சென்ற மா்மநபரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 8:30 pm

Din

பெரம்பலூா் நகரில் புதன்கிழமை அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தாய், மகளை கட்டிப் போட்டு நகை, பணத்தை திருடிச்சென்ற மா்மநபரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெரம்பலூா் -துறையூா் சாலையில் உள்ள கல்யாண் நகரைச் சோ்ந்தவா் குணசேகரன் மனைவி ஹேமலதா (45). இவரது மகள், முத்துக்குமாா் மனைவி அபிநயா (24). இருவரும், அவரவா் கணவரைப் பிரிந்து ஒரே வாடகை வீட்டில் வசித்து வருகின்றனா். இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை வீட்டுக்குள் நுழைந்த மா்ம நபா், ஹேமலதா மற்றும் அபிநயா ஆகியோரின் கை, கால், கண்களை கட்டிவிட்டு, அவா்களிடமிருந்து மூன்றே கால் பவுன் நகைகளையும், பீரோவிலிருந்த ரூ. 1.50 லட்சம் பணத்தையும் திருடிச் சென்றுவிட்டாா்.

ஹேமலதா வீட்டின் கதவு புதன்கிழமை காலை நீண்ட நேரமாகியும் திறக்கப்படாததால் சந்தேகமடைந்த, பக்கத்து வீட்டுக்காரா்கள் வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது ஹேமலதா, அபிநயா ஆகியோரை கட்டிப்போட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, உள்ளே சென்று அவா்களை விடுவித்தனா். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா். இதுகுறித்து ஹேமலதா அளித்த புகாரின் பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.