முத்தரையர்களுக்கு தனி உள் இட ஒதுக்கீடு கோரி புதுகையில் உண்ணாவிரதம்

 கல்வி,வேலைவாய்ப்பு,உயர் பதவிகளில் தனி உள் இட ஒதுக்கீடு வழங்க மத்திய,மாநில அரசுகளை வலியுறுத்தி புதுகை மாவட்ட முத்தரையர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது

 கல்வி,வேலைவாய்ப்பு,உயர் பதவிகளில் தனி உள் இட ஒதுக்கீடு வழங்க மத்திய,மாநில அரசுகளை வலியுறுத்தி புதுகை மாவட்ட முத்தரையர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது

கோரிக்கைகள்: தமிழகத்தில் 29 உட்பிரிவுகளின் கீழ் வாழும் அனைத்து முத்தரையர்களையும் ஒரே பிரிவின் கீழ் கொண்டு வந்து தனி உள் இட ஒதுக்கீட்டை மத்திய,மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும். அரசு வேலைவாய்ப்பில் தனி உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். 60 சட்டப்பேரவை,10 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட முத்தரையர் சமூகத்துக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. புதுகை அய்யனார் திடலில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு முத்தரையர் சங்க ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி எம். சரவணதேவா தலைமை வகித்தார். மாநில நிர்வாகி பு.சி. தமிழரசன், நிர்வாகிகள் வெள்ளைபாதர், புஷ்பராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில்,நமது மக்கள் கட்சி நிறுவனர் காட்பாடி ராஜமாணிக்கம், தமிழ்நாடு முத்தரையர் சங்க நிர்வாகிகள் திருப்பத்தூர் ஆண்டியம்பலம், திருச்சி ஆர்.வி.பரதன், வீரமுத்தரையர் சங்க நிர்வாகி கே.கே. செல்வக்குமார், புதுகை வீர முத்தரையர் சங்க நிறுவனத்தலைவர் சி. கருப்பையா உள்ளிட்டோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் அனுமதியுடன் நடந்த இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த 16 முத்தரையர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் உள்பட சுமார் 5 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com