
விராலிமலையில் சுகாதார விழிப்புணர்வுப் போட்டி
ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் வட்டார வளமையம், விராலிமலையில் ஒன்றிய அளவில் மாணவர்களுக்கு சுகாதாரம் குறித்த
ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் வட்டார வளமையம், விராலிமலையில் ஒன்றிய அளவில் மாணவர்களுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வுப் போட்டிகள் வட்டார வளமையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
மோசமான சுகாதாரத்தால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. எனவே பள்ளிக் குழந்தைகளிடையே சுத்தம், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாணவர்களிடையே சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் வினாடி வினா போட்டிகள் பள்ளி அளவிலும் தொடர்ந்து ஒன்றிய அளவில் நடத்தப்பட்டது. இதில், மாநில அளவில் தூய்மை பள்ளி விருது பெற்ற விராலிமலை ஆண்கள் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ச. புவனேஸ்வரி(பொ) உள்ளிட்டோர் கலந்து கொண்டு சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினர். ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.
பொன்னமராவதி: வட்டார வளமையத்தில் நடைபெற்ற போட்டியை வளமைய மேற்பார்வையாளர் செல்வக்குமார் தொடங்கிவைத்தார். வட்டாரக் கல்வி அலுவலர்கள் சே.ராமதிலகம், பால்டேவிட் ரொசாரியோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார அளவில் முதலிடம் பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுநர் புவனேஸ்வரி செய்திருந்தார். ஆசிரியர்கள் நடுவர்களாக செயல்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




