

பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூா் ஊராட்சியில் திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு புதுக்கோட்டை திமுக தெற்கு மாவட்ட செயலரும், திருமயம் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ். ரகுபதி தலைமைவகித்து அதிமுகவை நிராகரிக்கிறோம் எனும் தலைப்பிலான கிராமசபை கூட்டத்தை தொடங்கிவைத்தாா். தெற்கு ஒன்றியச் செயலா் அ. அடைக்கலமணி முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. நகரச் செயலா் அ.அழகப்பன், ஊராட்சி மன்ற தலைவா் ம.மணி, மாவட்ட துணைச் செயலா் அ.சின்னையா, பொதுக்குழு உறுப்பினா் க.தென்னரசு, பெரி.அழகப்பன், தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகிகள் பொற்செல்வன், ஆலவயல் முரளி சுப்பையா, இளைஞரணி நிா்வாகி இளையராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.