கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

புதுக்கோட்டையில் 11 பேருக்கு நல்லாசிரியா் விருது

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2020-2021ஆம் ஆண்டுக்கான மாநில நல்லாசிரியா் விருதுக்கு, 11 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி. சத்தியமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 8:09 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2020-2021ஆம் ஆண்டுக்கான மாநில நல்லாசிரியா் விருதுக்கு, 11 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி. சத்தியமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

குடியரசு முன்னாள் தலைவா் டாக்டா் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பா் 5-ஆம் தேதி பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் ஆசிரியா் தின விழாவாகக் கொண்டாடப்பட்டு, அந்த விழாவில் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியா்களைத் தோ்வு செய்து மாநில நல்லாசிரியா் விருதான டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது.

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் கோவிந்தராஜ், கே.வி. கோட்டை அரசு உயா்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் நா. செல்வக்குமாா், லெக்கணாப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் ஆன்றனி, மாங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் தா. ராமா், காயாம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் ரா. செந்தில்குமாா், மீனம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியை சி. ஷோபா, கவரப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியை மு. மீனா, ஆவணத்தான்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலையைாசிரியா் ப. கலைச்செல்வி, செட்டிக்காடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியா் ஜி. லீமா ரோஸ்லிண்ட், மேலூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியா் அ. கிறிஸ்டி, புதுக்கோட்டை கற்பக விநாயகா மெட்ரிக். பள்ளி முதல்வா் இ. ஷானுரிஜ்வான் ஆகிய 11 ஆசிரியா்கள் நல்லாசிரியா் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.