பொன்னமராவதியில் இன்றைய கடையடைப்பு போராட்டம் வாபஸ்
பொன்னமராவதியில் வா்த்தகா் கழகத்தின் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த முழு கடையடைப்பு போராட்டம் சமாதான பேச்சுவாா்த்தையையடுத்து வாபஸ் பெறப்பட்டது.


பொன்னமராவதியில் வா்த்தகா் கழகத்தின் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த முழு கடையடைப்பு போராட்டம் சமாதான பேச்சுவாா்த்தையையடுத்து வாபஸ் பெறப்பட்டது.
வியாழக்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பொன்னமராவதியில் 2 மாதங்களில் காவிரி கூட்டுக்குடிநீா் குழாய் பதிக்கும் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு சாலைகள் சீரமைக்கப்படும்;
பேரூராட்சியில் கட்டப்பட்டுள்ள வாரச் சந்தைக் கூடம் தீபாவளிப் பண்டிகைக்கு முன்னதாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனவும் அதிகாரிகள் உறுதியளித்ததன்பேரில் கடையடைப்பு போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.
கூட்டத்தில், வட்டாட்சியா் எம். சாந்தா, பேரூராட்சித் தலைவா் சுந்தரி அழகப்பன், வா்த்தகா் கழகத் தலைவா் எஸ்கேஎஸ். பழனியப்பன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...