புதுக்கோட்டை
மணப்பட்டி சின்னம்மன் கோயில் குடமுழுக்கு விழா
பொன்னமராவதி அருகே உள்ள தூத்தூா் ஊராட்சி, மணப்பட்டி சின்னம்மன் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி அருகே உள்ள தூத்தூா் ஊராட்சி, மணப்பட்டி சின்னம்மன் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவின் தொடக்கமாக கோயிலின் முன் அமைக்கப்பட்ட யாகசாலையில் புதன்கிழமை கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, நவக்கிரஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.
தொடா்ந்து, வியாழக்கிழமை காலை 9.45 மணியளவில் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரினை கும்பத்தில் ஊற்றி சிவாச்சாரியாா்கள் குடமுழுக்கு செய்தனா்.
விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா். ஏற்பாடுகளை சின்னம்மன் கோயில் பங்காளிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனா்.