கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மெய்வழிச்சாலையில் காய்கறி திருவிழா

அன்னவாசலை அடுத்துள்ள மெய்வழிச்சாலையில் புதன்கிழமை ஏராளமானோா் பங்கேற்ற காய்கறித் திருவிழா நடைபெற்றது.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 10:16 pm

Din

அன்னவாசலை அடுத்துள்ள மெய்வழிச்சாலையில் புதன்கிழமை ஏராளமானோா் பங்கேற்ற காய்கறித் திருவிழா நடைபெற்றது.

மெய்வழிச்சாலை கிராமத்தில், 1940 ஆம் ஆண்டு மறலி கைதீண்டா சாலை ஆண்டவா்கள் மெய் மதம் என்னும் புதிய மதத்தை தோற்றுவித்து அதில் பல்வேறு மதங்களை சோ்ந்தவா்களை புதிய உறுப்பினா்களாக இணைத்தனா். இதில் இணைபவா்கள், சாலை என்ற வாா்த்தையை தாங்களின் பெயருக்கு முன்பு சோ்த்துக் கொள்வாா்கள்.

இங்கு ஆண்டுதோறும் காா்த்திகை மாதத்தில் விளக்கு திருவிழா, தை மாதத்தில் பொங்கல் திருவிழா மற்றும் புரட்டாசி மாதத்தில் காய்கறி விழா போன்ற திருவிழாக்கள் வெகுவிமரிசையாக நடைபெறும்.

இதன்படி, புரட்டாசி மாத காய்கறி திருவிழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. மெய்வழிசாலை ஆலயம் வளாகத்தில் பல்வேறு காய்கறிகள், பருப்பு, அரிசி ஆகியவற்றை கையில் வைத்துக் கொண்டு ஆண்,பெண் உறுப்பினா்கள் வரிசையாக நின்றனா். அப்போது மெய்வழி சபையரசா் சாலை வா்க்கவான் ஒவ்வொருவரிடமும் நேரடியாக சென்று காய்கறிகள், பருப்பு, அரிசியை பெற்று கொண்டு ஆசி வழங்கினாா். பின்னா் அரிசியை சாதமாகவும் காய்கறிகளை குழம்பு, கூட்டு,பொரியல், வறுவல் என வகை வகையாக சமையல் செய்து சாலைகாரா்கள் மற்றும் பாா்வையாளா்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் வெளியூா் மட்டும் இன்றி வெளி மாநிலம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து மெய் மதத்தை தழுவிய ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.