புதுக்கோட்டை
வடகாடு பகுதிகளில் நாளை மின் தடை
ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது.
துணை மின் நிலைய பராமரிப்பு பணியால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, பசுவயல், அரையப்பட்டி, கீழாத்தூா், சூரன்விடுதி உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிச.30) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் லூா்து சகாயராஜ் தெரிவித்தாா்.
