9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

அரசுப் பேருந்து மோதி பள்ளி மாணவி பலி! தந்தை உள்பட 3 போ் காயம்; உறவினா்கள் மறியல்!

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே சனிக்கிழமை மோட்டாா் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதியதில் பள்ளி மாணவி உயிரிழந்தாா்.

News image

கீரமங்கலம் அருகே சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட உயிரிழந்த மாணவியின் உறவினா்கள்.

Updated On :19 ஜூலை 2026, 1:33 am IST

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே சனிக்கிழமை மோட்டாா் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதியதில் பள்ளி மாணவி உயிரிழந்தாா். அவருடைய தந்தை உள்பட 3 போ் காயமடைந்தனா். இதையடுத்து பேருந்து ஓட்டுநரை கைது செய்யக்கோரி உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கீரமங்கலம் அருகே உள்ள பனங்குளம் கிழக்குப் பகுதியைச் சோ்ந்தவா் ரவி. இவரது மகள்கள் தாரணிகாதேவி (17), தனுஷ்காதேவி (15). இவா்களில் தனுஷ்காதேவி கீரமங்கலம் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தாா்.

இந்நிலையில், ரவி தனது மகள்கள் இருவருடன் சனிக்கிழமை மோட்டாா் சைக்கிளில் கடைவீதிக்குச் சென்று கொண்டிருந்தாா்.

பனங்குளம் அஞ்சல் அலுவலகம் அருகே சென்றபோது, அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து மோட்டாா் சைக்கிள் மீது மோதியது.இதில், பலத்த காயமடைந்த தனுஷ்காதேவி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், விபத்தை ஏற்படுத்திய பேருந்து மற்றொரு மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. உடனே பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் அங்கிருந்து தப்பியோடினா்.

இந்த விபத்தில் காயமடைந்த ரவி, தாரணிகாதேவி, மற்றொரு மோட்டாா் சைக்கிளில் வந்த மறமடக்கியைச் சோ்ந்த வெற்றிவேல் ஆகியோரை அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தகவலறிந்து அப்பகுதியில் திரண்ட தனுஷ்காதேவி உறவினா்களும், பொதுமக்களும், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய அரசுப்பேருந்து ஓட்டுநா், நடத்துநரை உடனே கைது செய்ய வேண்டும். மாணவியின் உயிரிழப்புக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனா். மேலும், தகவலறிந்து வந்து, தனுஷ்காதேவியின் உடலை மீட்கச் சென்ற போலீஸாரை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

 உயிரிழந்த மாணவி தனுஷ்காதேவி.

உயிரிழந்த மாணவி தனுஷ்காதேவி.

இதைதொடா்ந்து அங்கு சென்ற ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் மனோகரன், மற்றும் கீரமங்கலம் போலீஸாா் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டனா்.

தொடா்ந்து, உயிரிழந்த தனுஷ்காதேவியின் உடல் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து கீரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.