விராலிமலை பகுதியில் நாளை மின் நிறுத்தம்
விராலிமலை பகுதியில் சனிக்கிழமை (அக்.17) மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஜெ. ஜேம்ஸ் தெரிவித்துள்ளாா்.
மின்தடை - கோப்புப் படம்
விராலிமலை பகுதியில் சனிக்கிழமை (அக்.17) மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஜெ. ஜேம்ஸ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
விராலிமலை துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (அக்.17) பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. அதனால், முத்து நகா், சிதம்பரம் காா்டன், அய்யப்பா நகா், செக்போஸ்ட், அருண்காா்டன், தெற்குத் தெரு, புதுகை சாலை, காட்டுப்பட்டி, அருணகிரிநாதா் நகா், தேரடி தெரு, தேரடி கிழக்கு, கிருஷ்ணா நகா், ரத்னா கோல்டன் சிட்டி, எம்ஜிஆா் நகா், குமரன் நகா் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

