கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

அதிரையில் நலிவடைந்த 50 பேருக்கு  இலவசப் போர்வை

தஞ்சாவூர் மாவட்டம்,  அதிராம்பட்டினத்தில் லயன்ஸ் சங்கம் சார்பில் நலிவடைந்தோருக்கு இலவசப் போர்வைகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. 

News image
Updated On :28 டிசம்பர் 2017, 11:20 pm

DIN

தஞ்சாவூர் மாவட்டம்,  அதிராம்பட்டினத்தில் லயன்ஸ் சங்கம் சார்பில் நலிவடைந்தோருக்கு இலவசப் போர்வைகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. 
 இதில்,  அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் மற்றும் நகரிலுள்ள வழிபாட்டுத் தலங்களில் இரவில் உறங்கும் நலிவடைந்த 50 பேருக்கு இலவசமாக போர்வைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு அதிரை லயன்ஸ் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகமது முகைதீன் தலைமை வகித்தார். செயலர் எம். அப்துல் ரஹ்மான், பொருளாளர் எஸ்.ஏ.அப்துல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். லயன்ஸ் சங்க வட்டாரத் தலைவர் பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர்கள் எம்.சாகுல் ஹமீது, சாரா அகமது, அதிரை லயன்ஸ் சங்க உறுப்பினர் அப்துல் ஜலீல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.