மணல் அள்ளி வந்த மாட்டு வண்டிகள் பறிமுதல்: 6 பேர் கைது
பாபநாசம் அருகே ஆற்றிலிருந்து அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 6 மாட்டு வண்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.


பாபநாசம் அருகே ஆற்றிலிருந்து அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 6 மாட்டு வண்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
அய்யம்பேட்டை பகுதியில் மணல் கடத்தலை தடுக்கும் வகையில் போலீஸார் புதன்கிழமை ரோந்துப் பணி மேற்கொண்டனர். அப்போது, கணபதியக்ரஹாரம் அய்யம்பேட்டை சாலையில் 3 மாட்டு வண்டிகளில் சிலர் குடமுருட்டி ஆற்றிலிருந்து அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரிந்தது. அந்த 3 மாட்டு வண்டிகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல், சூலமங்கலம் பிரதான சாலையில் அனுமதியின்றி ஆற்றிலிருந்து மணல் ஏற்றி வந்த மூன்று மாட்டு வண்டிகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.மேலும் மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களான கோபாலபுரம் தர்மதுரை, மாகாளிபுரம் சூர்யா, ரெகுபதி, அய்யம்பேட்டை குணசேகரன்,திருநாவுக்கரசு, மதிவாணன் உள்ளிட்டோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...