நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

வங்கியில் கள்ள நோட்டுகள்: போலீஸார் விசாரணை

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 3 வங்கிகளில் இருந்து கள்ள நோட்டுகள் வந்தது குறித்து ரிசர்வ் வங்கி அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Updated On :30 ஜனவரி 2024, 6:44 pm IST

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 3 வங்கிகளில் இருந்து கள்ள நோட்டுகள் வந்தது குறித்து ரிசர்வ் வங்கி அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தஞ்சாவூர், கும்பகோணத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட 3 வங்கிகளில் இருந்து 2017, நவ. 1-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்குப் பண பரிவர்த்தனை நடைபெற்றது. இதில், தஞ்சாவூரில் உள்ள வங்கியில் இருந்து 25 நோட்டுகளும், கும்பகோணத்தில் உள்ள இரு வங்கிகளில் இருந்து 5 நோட்டுகளும் என மொத்தம் 30 கள்ள நோட்டுகள் வந்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்டக் காவல் அலுவலகத்தில் ரிசர்வ் வங்கியின் சென்னை துணைப் பொது மேலாளர் ஆர்.எஸ். ரவீந்திரன் புகார் செய்தார். இதுகுறித்து விசாரணை நடத்துமாறு மாவட்டக் குற்றப் பிரிவுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் த. செந்தில்குமார் ஆணையிட்டார். இதன்படி, மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.