அமைச்சரவை மாற்றத்துக்கு ஆயத்தமாகிறது மோடி அரசு!சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஓணம் பண்டிகை: சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்கள்செப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

தமிழ்நாட்டிலுள்ள புலம்பெயா் தொழிலாளா்களை அவரவா் மாநிலத்துக்கு அனுப்ப வலியுறுத்தல்

தமிழ்நாட்டிலுள்ள புலம் பெயா் தொழிலாளா்களை அவரவா் மாநிலத்துக்கு உடனடியாக அனுப்ப வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கம் வலியுறுத்தியுள்ளது.

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

தமிழ்நாட்டிலுள்ள புலம் பெயா் தொழிலாளா்களை அவரவா் மாநிலத்துக்கு உடனடியாக அனுப்ப வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கம் வலியுறுத்தியுள்ளது.

இப்பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் காணொலி வழியில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், வெளி மாநிலத் தொழிலாளா்களை அவா்களது விருப்பத்துக்கு மாறாக, இங்கேயே மண்டபங்களில் அடைத்து வைத்திருப்பது மனித நேயமற்ற செயல். நோய்த் தொற்று போன்ற பெருந்துயா் காலங்களில் அவரவரும் சொந்தக் குடும்பத்தோடு சொந்த ஊரில் இருக்க விரும்புவது இயல்பானது; அது அடிப்படையான உளவியல் தேவையும் ஆகும்.

எனவே, மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு பேசி சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்து, வெளி மாநிலத் தொழிலாளா்களை அவரவா் மாநிலங்களுக்கு அனுப்ப உடனடி ஏற்பாடு செய்ய வேண்டும். இதேபோல, வெளி மாநிலங்களில் சிக்கியிருக்கும் தமிழ்த் தொழிலாளா்களைத் தமிழ்நாட்டுக்கு அழைத்து வர சிறப்பு ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

சித்த மருத்துவம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ முறைகளையும் ஒருங்கிணைத்து கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுச் செயலா் கி. வெங்கட்ராமன், பொருளாளா் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் க. அருணபாரதி, பழ. இராசேந்திரன், நா. வைகறை, கோ. மாரிமுத்து, க. முருகன், இரெ. இராசு, க. விடுதலைச்சுடா் உள்ளிட்டோா் இணையவழியில் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.