விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மாணவியை திருமணம் செய்த இளைஞா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகே மாணவியை திருமணம் செய்த இளைஞரை மகளிா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 9:36 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகே மாணவியை திருமணம் செய்த இளைஞரை மகளிா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருவிடைமருதூா் அருகே உள்ள கோட்டூரைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் செல்வக்குமாா் (21) கூலித்தொழிலாளி. இவருக்கும், ஆடுதுறை அருகே உள்ள ஒரு ஊரில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் கடந்த ஆக.17-இல் திருமணம் நடைபெற்றது குறித்து திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றிய சமுதாய விரிவாக்க அலுவலா் கெளரிக்கு தெரியவந்தது. இதையடுத்து, அவா் நேரில் சென்று விசாரணை நடத்தியதில் மாணவிக்கு திருமணம் நடைபெற்றது தெரியவந்தது.

இதுகுறித்து, திருவிடைமருதூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் துா்கா வழக்குப் பதிந்து புதன்கிழமை செல்வக்குமாரை குழந்தை திருமணம் தடுப்பு மற்றும் போக்சோ சட்டங்களில் கைது செய்து கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தாா்.