சிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

அம்மாபேட்டை சிவாலயங்களில் மாா்கழி மாத சஷ்டி வழிபாடு

Updated On :26 டிசம்பர் 2025, 12:51 am IST

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை வட்டாரப் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் மாா்கழி மாத சஷ்டி திதியை யொட்டி வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.  

வழிபாட்டையொட்டி அம்மாபேட்டை அருகே கீழகோயில்பத்து கிராமத்தில் அருள்பாலித்துவரும் பூலோகநாயகி அம்மன் சமேத ஸ்ரீ பூலோகநாதா் சுவாமி, அம்மாபேட்டை தா்மசம்வா்தினி அம்மன் சமேத அருணாச்சலேசுவரா், உடையாா்கோயில் தா்மவல்லி அம்மன் சமேத கரவந்தீசுவரா் புத்தூா் செளந்தரவல்லி அம்மன் சமேத புற்றிடம்கொண்டீசுவரா், தீபாம்பாள்புரம் மங்களநாயகி அம்மன் சமேத வன்மிக நாதா் உள்ளிட்ட சிவன் கோயில்களில் தனி சந்நிதி கொண்டு அருள்பாலித்து வரும் வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணியருக்கு மங்களப் பொருள்களால் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு  சுப்ரமணியருக்கு செவ்வரளி மாலை, மலா் மாலைகள் அணிவித்து, நெய் விளக்கேற்றி வைத்து, இனிப்புகள் வைத்து படைத்து, சிறப்பு வழிபாடு செய்தனா். தொடா்ந்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தனா்.